
“கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது”என முன்னோர்கள் கூறுவார்கள்… அதன் காரணம் என்ன தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் அமர்ந்து கொண்டிருக்கும் போதும் வேலை பார்க்கும் பொழுதும் கால் ஆட்டினால் கால் ஆட்டாதே கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது. என்று கூறுவார்கள் ஆனால் அது எதற்கு கூறுகிறார்கள் அதன் அர்த்தம் என்ன என்று இன்றும் பல பேருக்கு தெரிவதில்லை. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆண் பெண் என இருவரும் கால் ஆட்டினாலும் பெண் பிள்ளைகள் காலாட்டினால் இப்படி கால ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது என்று வீட்டில் உள்ள அம்மா அல்லது பாட்டி கூறுவார்கள். அதற்கு நாம் ஏன் கால் ஆட்ட கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்போம். அதற்கான உண்மையான காரணம் கால் ஆட்டுவதால் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். நம் உடலில் உள்ள எடையை முழுவதுமாக சுமக்கும் உறுப்பு கால். கால்களை தொடர்ந்து ஆட்டிக்கொண்டே இருப்பதால் மூட்டு பகுதிக்கு செல்லும் நரம்பு பாதிப்படைந்து மூட்டு பகுதி தேய்மானம் மற்றும் சவ்வு கிழிந்து மூட்டு எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் பெண்கள் கால் ஆட்டுவதால் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கால் ஆட்டுவதால் இளைஞர்களின் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகிறது. இதனால்தான் நம் வீட்டு முன்னோர்கள் கால் ஆற்றுவது குடும்பத்திற்கு ஆகாது என்று கூறி இருக்கிறார்கள்.