
தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் மகாளய அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி தை அமாவாசை நேற்று கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தேங்காய், பழம், அரிசி, எள், காய்கறிகள் படையலிட்டனர்.
தங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து எள் பிண்டம் வைத்து வழிபட்ட பின்னர் அதனை காவிரி ஆற்றில் கரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, பசு மாடுகளுக்கு அகத்திக் கீரையும் வழங்கினர்.
இதில் குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கடம்பன் துறை காவிரி ஆற்றில் வழிபாடு செய்து வந்தனர்.