கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால் சச்சின், எம் எஸ் தோனி, ரோஹித் என அவர்கள் பெயர் தான் நமக்கு முதலில் நியாபகம் வரும். சச்சினுக்கு பிறகு பல விதத்தில் சாதனை படைத்த ஒரு கிரிக்கெட் வீரர் தான் விராட் கோலி. தொடர்ந்து பல சாதனைகளை செய்து வந்த இவர், இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள் தான் சேர்த்து வருகிறார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
அதற்காக தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோலி தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் விராட் கோலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஆஸ்திரேலியாவில் இருக்கும் கோலிக்கு திடீரென மருத்துவப் பரிசோதனை ஸ்கேன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது வழக்கமான பரிசோதனை தான் என்றும். பெரிய அளவிலான பிரச்சனை எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.