கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரே நிலையில் இல்லாமல் விலை குறைந்தும் கூடியும் வந்தது. வரும் நாட்களில் குறைய தொடங்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறைவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று நகை வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும், இன்று 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 6,565 ரூபாய்க்கும், ஒரு சவரன் 52,520 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ளி இன்றைக்கு ஒரு கிராம் 89 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 89,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.