
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் நான்கு வகை பழங்கள் தான் சாப்பிடலாம் இரண்டு வகை பழங்களை தொடக்கூடாது என உணவு கட்டுப்பாடு குறித்து டாக்டர் சௌந்தர்ராஜன் கூறும் விளக்கம் இங்கே…
நமக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்த பின்னர் என்ன சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை இப்போது பார்ப்போம்…
நமது உடலின் முக்கிய கழிவு நீக்க உருப்பான சிறுநீரகம் செயலிழந்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் சிறுநீரக பாதை தோற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும் இப்படியான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இந்த நிலையில் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உணவு மூலம் வராமல் தடுப்பது எப்படி. வந்த பின்னர் என்ன உணவுகளை சாப்பிடலாம் எவற்றை சாப்பிடக்கூடாது என தெரிந்து கொள்வோம்..
நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதச்சத்து உடலுக்கு தேவையான அளவு உறிஞ்சப்பட்டு பின்னர் யூரியாவாக சிறுநீர் வழியாக வெளியேறும் இந்த யூரியா ரத்தத்தில் கலக்காமல் தடுப்பதை சிறுநீரகங்களின் முக்கிய பணியாகும். எனவே கிட்னி செயலிழக்கும் அபாயத்தில் உள்ளவர்கள் அதிக புரத உணவுகளை செய்யக்கூடாது எடுத்துக் கொள்ளக் கூடாது இறைச்சி போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ளக்கூடாது. புரதசத்தை குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். சைவ பிரதசத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவே அரிசி வேகவைத்த காய்கறிகள் கொஞ்சம் பால் பொருட்கள் மூலம் சாப்பிடலாம் முட்டையின் வெள்ளைக்கரு தினமும் சாப்பிடலாம். இறைச்சி வாரத்திற்கு ஒருமுறை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது…
பொட்டாசியம் அதிகமாக இருப்பதை சிறுநீரக செயலிழப்புக்கு காரணம் மாதுளை வாழைப்பழம் திராட்சை பேரிச்சை மற்றும் துரித உணவுகளில் பொட்டாசியம் அதிகம். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும். பழங்களில் ஆப்பிள் கொய்யா அண்ணாசி பப்பாளி ஆகிய நான்கு பழங்களை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாம் இது தவிர வேறு பலன்களை கவனமாக எடுத்துக் கொள்வது அவசியம்..!!