
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி அரண்மனை தோட்டம் என்ற இடத்தில், நேற்று மாலை சுமார் 60 அடி ஆழம் 10அடி தண்ணீர் உள்ள கிணற்றில் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி மயிலை பத்திரமாக மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தனர்