
- கின்னஸ் சாதனை செய்த பெங்களூர் ரவி.. திருடனாக மாறிய அதிர்ச்சி சம்பவம். போலீசாரை திகைக்க வைத்த காரணம்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வாசவி அம்மன் கோவில் இருக்கிறது. அங்கே வெள்ளி சிலைகள் காணாமல் போனதை அடுத்து கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
கோவிலுக்கு அருகில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ச்சி செய்தனர். இதன் அடிப்படையில் போலீசார் ஒரு நபரை கைது செய்து விசாரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
இதில் கைது செய்யப்பட்ட நபர் என் எஸ் சாதனை செய்த ரவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2000 முதல் 2006 வரை இவர் மக்களிடையே எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வில் ஈடுபட்டு வந்தவர். 33 மாநிலங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை செய்த இவர் தற்போது ஒரு கொள்ளையனாக மாறியுள்ளது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் மகாராஷ்டிரா அரசு இவருக்கு இந்த சாதனையின் மூலம் மோட்டார் சைக்கிள் வழங்கி பாராட்டுகளையும் தெரிவித்தது. அவருக்கு வேலை வெட்டி எதுவும் இல்லாத காரணத்தால் வறுமையில் வாடி வந்த நிலையில் தற்போது அவர் ஒரு திருடனாக மாறியுள்ளார். இவரிடம் இருந்து கோவில் சிலைகளை போலீசார் மீட்ட நிலையில் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.