
எள் உருண்டை என்பது கிராமப்புறங்களில் அடிக்கடி செய்யும் ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். இதில் அவ்வளவு பயன்கள் நிறைந்தது குறிப்பாக இந்த எள் உருண்டை எலும்புகளுக்கு வலிமை தரும். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எள்ளுருண்டை, வேர்க்கடலை உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, போன்ற சத்து மிக்க பொருட்களை எல்லாம் வைத்து ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பார்கள். ஆனால், இந்த நவீன காலகட்டத்தில் பலரும் வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று தான் கேட்கிறார்கள். இந்நிலையில் இந்த எள்ளுருண்டை செய்ய 10 நிமிடமே போதும். இந்த எள்ளுருண்டை எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு எள் – 250 கிராம்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை:
எள்ளை தண்ணீர் விட்டு களைந்து கல் அரித்து, வடிகட்டி பின்னர் அதை வெறும் வானொலியில் போட்டு பொரியும்படி நன்றாக வறுக்க வேண்டும். பிறகு, ஒரு அடுப்பில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு பாகுபதத்திற்கு நன்றாக காய்ச்சி அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வறுத்த எல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு ஏலக்காய் தூள் சேர்த்து பாகு விட்டு நன்கு கலந்து, சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்தால் சுவையான சத்து மிக்க எள்ளுருண்டை தயார். நீங்களும் உங்க வீட்ல இதை மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.