கிராமத்து ஸ்டைலில் பார்த்தாலே பசி எடுக்கும் தக்காளி குழம்பு..!! 10 நிமிடம் போதும்..!!

காலையில் வேலைக்கு செல்பவர்கள் அவசரமாகவும் ஆரோக்கியமாகவும் ஒரு குழம்பு தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ”தக்காளி குழம்பு” சிறந்த தேர்வாக இருக்கும்.

தக்காளியில் அதிகளவு வைட்டமின் -சி மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதுடன் கண்பார்வையை சீர் செய்கின்றது.

இப்படி மருத்துவ குணங்கள் நிறைந்த தக்காளியில் 10 நிமிடத்தில் ஆரோக்கியத்துடன் கூடிய சுவையான குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நாட்டுத் தக்காளி, அல்லது சாதாரண தக்காளி – 4

பச்சை மிளகாய் – 1

சின்ன வெங்காயம்- 15

பூண்டு – 10பல்

இஞ்சி சிறிய துண்டு

பொடியாக துருவிய தேங்காய் – சிறிதளவு,

சீரகத்தூள் – 1 தே.கரண்டி

மிளகாய்த்தூள் -1 தே.கரண்டி

மஞ்சள்தூள் – 1/4 தே. கரண்டி

தனியாத்தூள் – 2 தே. கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் – 1 ,

கறிவேப்பிலை,

கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து தாளித்து பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அதன்பின் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் தக்காளியை சேர்க்கவும், தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், சாம்பார் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து திரும்பவும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின் கலவை ஆறியவுடன் ஆட்டு கல்லை பயன்படுத்தி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.

பொடியாக நறுக்கி வைத்திருக்கின்ற பெரிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின் கருவேப்பிலையை அதில் சேர்க்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கின்ற தக்காளி விழுதை அதில் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டால் ருசியான தக்காளி குழம்பு தயார்.

Read Previous

ஒரு தந்தை தனது மகனுக்கு எழுதிய கடிதம்..!! கண்ணீர் வரவழைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

SBI வங்கியில் வேலைவாய்ப்பு..!! 150 காலியிடங்கள்..!! Any Degree போதும்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular