
நடிகர் தலை வாசல் விஜய்யின் மகள் ஜெய வீனாவுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் அபராஜித்துக்கும் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அபராஜித், ரஞ்சித் கிரிக்கெட் கோப்பைக்காக ஆடியவர். சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பலர் பங்கேற்று இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், ஜெய வீனாநீச்சல் வீராங்கனை ஆவார். இவர் சிறு வயதிலிருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.