கிருஷ்ணகிரியில் சூடு பிடிக்கும் உடும்பு விற்பனை..!!

கிருஷ்ணகிரியில் நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் பெரும்பான்மையான ஒரு வாழும் சிக்கரிமேடு பகுதியில் இறைச்சிக்காகவும் மற்ற உடல் உறுப்பு தேவைக்காகவும் காட்டு விலங்குகளை வேட்டையாடும் பழக்கம் தடை செய்யப்பட்ட போதிலும் தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது.

TNIE வனவிலங்குகளுக்கான மாநில வாரிய உறுப்பினர் ஆண்டனி ரூபின் கிளெமென்டுடன் பழங்குடி கிராமத்திற்கு சென்றது, இப்பகுதியில் உடும்பு கறி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது, இதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை 44 இ.ல சிங்கரிமேடு அருகில் மப்டியில் அதிகாரிகள் குழு நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் வந்து உடும்பு விற்கும்  சிக்கந்தர் என்பவரை அடையாளம் காட்டினார்.

உடும்பை தேடுகிறீர்களா..? என்று சிக்கந்தர் அதிகாரிகளிடம் தமிழில் கேட்டார் உறுதியான பதிலை பெற்றவுடன் அவர் அந்த குழுவை கிராமத்திற்குள் அழைத்து சென்றார். மற்றொரு கிராமவாசி இரண்டு உடும்புகளை வெளியே கொண்டு வந்தார். அதன் கால்கள் செம்பு கம்பியால் கட்டப்பட்டு இருந்தது. கிராமவாசிகள் உடம்பின் இறைச்சிய வெட்டி சமைத்து பரிமாறவும் ஊர்வனவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தி உடல் மசாஜ் செய்யவும் முன் வந்தனர்.

மேலும் பல்லியின் ரத்தத்தை குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்று என்று கூறி அவர்கள் பிரபல கன்னட நடிகர் ஒருவர் தங்களுடைய வழக்கமான வாடிக்கையாளர் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து சிக்கந்தர் TNIE அதிகாரிகளிடம் பெங்களூரில் சென்னை மற்றும் ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளை சார்ந்தவர்கள் குறிப்பாக வார இறுதி நாட்களில் உடும்பு கறிக்காகவே சிக்கரிமேட்டுக்கு தவறாமல் வருகை தருகின்றனர். கருவுறாமை பிரச்சனைகள் உள்ள தம்பதிகள் மற்றும் உடற் தகுதி உள்ளவர்கள் மத்தியில் உடும்பு கறியில் தேவை தற்பொழுது அதிகமாக உள்ளது என்றும் கூறினர்.

அவர்கள் இந்த சம்பவம் குறித்து தலைமை வனவிலங்கு காப்பாளர் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர்வன ஓசூர் மாவட்ட வன அலுவலர் கே கார்த்திகேயனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருப்பூர், கடலூரில் பிடிக்கப்படும் உடும்புகள் பொதுவாக பேருந்துகள் மூலம் சிக்கரி மேட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றது. இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குதல் மற்றும் கிராமத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது உட்பட அவர்களை தடுக்க பல்வேறு வழிமுறைகளை நாங்கள் முயற்சித்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Previous

இன்று முதல் கோடை விடுமுறைக்கு பின் வழக்கம்போல் இயங்கும் சென்னை மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றங்கள்..!!

Read Next

வேலூரில் 40க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி..!! மேல்நிலை நீர் தொட்டி காரணமா..? உள்ளூர் பிரியாணி காரணமா..? விசாரணையில் காவல் துறையினர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular