
மதுரையில் நாதக சீமான் நேற்று (ஜூன் 28) செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?. கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும் தான் குற்றவாளிகளா? அவர்கள் அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவன் அதிமுக நிர்வாகி என்பதால் இதை திருப்புகிறீர்கள். அப்போ, திமுகவிற்கும், போதைப் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா?” என்றார்.