ஆண்டுதோறும் கிருஷ்ணனை வணங்கும் விதமாக குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மேடம் அணிந்து கொண்டாடப்பட்டு வருகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது..
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து வீட்டில் உள்ள கிருஷ்ண படங்களுக்கு பொங்கலிட்டு பூஜை செய்து வணங்குவது மிகவும் நல்லது, மேலும் இந்த நாளில் மனதார கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றும் துன்பங்கள் விலங்கும் என்றும் தெய்வீக நம்பிக்கை உள்ளது, கிருஷ்ணனின் சிலையை நன்றாக பாலால் அல்லது வெண்ணையால் குளிப்பார்ட்டி பிறகு அலங்கரித்து வீட்டில் பொங்கல் வெண்ணை வைத்து வணங்குவது சுப காரியங்கள் நடப்பதற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது, மேலும் விஷ்ணு ஜெயந்தி அன்று கிருஷ்ணனுக்கு பிடித்த உணவு வகைகளை மற்றும் பழங்களை வைத்து வணங்குவது மேலும் வீட்டில் செல்வங்களை பெருக்கும்..!!