கிரேக்க நாட்டு கதை தொட்டதெல்லாம் பொன்னாகும் படித்ததில் பிடித்தது நீங்களும் படித்து பாருங்கள்..!!

கிரேக்க நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு எல்லா செல்வங்களும் நிறைந்து இருந்தன ஆனாலும் அவன் மனதில் பேராசை நிறைந்திருந்தது. உலகத்திலேயே நாம் தான் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று விரும்பினான்…

மன்னன் செல்வங்களுக்கு சொந்தமான ஒரு தேவதையை நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தான் ஒரு நாள் தேவதை மன்னனின் எதிரே தோன்றினாள் மன்னனே உனக்கு என்ன வேண்டும் தருகிறேன் என்றால்…

தேவதை தன் எதிரே வந்து நிற்பதை கண்டு பிரம்மித்தான் மன்னன் அவன் வேறு என்ன கேட்பான் தான்தான் உலகத்திலேயே மிகப்பெரிய செல்வந்தனாக திகழ வேண்டும் என்பதை அவன் லட்சியமாக அல்லவா மன்னன் யோசித்தான் தேவதையே நான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் உன்னிடம் ஏராளமான செல்வம் இருக்கிறதே பின் எதற்காக தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்ற வார்த்தை கேட்கிறாய் யோசித்து வேறு நல்ல வரமாக கேள் என்றால் தேவதை. ஆனால் மன்னன் மனம் மாறவில்லை தேவதையே எனக்கு நான் கேட்ட வரம் தந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை அப்படியே தருகிறேன் என்னை நினைத்து நீ எதை தொட்டாலும் அது பொன்னாக மாறும் வரத்தை உனக்கு தந்தேன் இதைக் கேட்ட மன்னன் மனமகிழ்ச்சி அடைந்தான் அந்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தால் அவள் மீது மன்னன் உயிரையே வைத்திருந்தான் அவளுக்கு பின் தான் எல்லாம் தேவதை மறைந்தால் தேவதை தந்த வரத்தை பரிசோதித்து பார்க்க விரும்பினான் மன்னன். அவன் இருந்த இடத்தில் ஏராளமான பூச்செடிகள் காணப்பட்டன அவற்றிலிருந்து மிகப்பெரிய ஒரு பூவை பறித்து கையில் வைத்துக் கொண்டான். அந்த பூவை தங்கமாக மாற்றி சோதிக்க எண்ணினான் தேவதையை மனதில் நினைத்தபடி கையில் இருக்கும் பூ தங்கமாக மாற வேண்டும் என்று நினைத்தான் என்ன அதிசயம் அவன் நினைத்தபடியே கையில் இருந்த பூ தங்கமாக மாறி மின்னியது மீண்டும் ஒருமுறை பரிசோதித்து பார்க்க எண்ணினான் அருகில் இருந்த ஒரு கல்லை கையில் எடுத்தான் மன்னன் தேவதையை மனதில் நினைத்து கொண்டு கையில் இருக்கும் கல் தங்கமாக மாற வேண்டும் என்று நினைத்தான். அந்த கல்லும் தங்கமாக மாறி மின்னியது. மகிழ்ச்சியோடு அரண்மனைக்கு திரும்பினான் எதிரே அவனுடைய செல்ல மகள் வந்தால் அவளது கையை பிடித்து மன்னன் தனது கிடைத்த சக்தியை அவளிடம் தெரிவிக்க விரும்பினான். அருமை மகளே நான் தேவதையை நினைத்து எது தங்கமாக மாற வேண்டும் என்று நினைத்தாலும் அப்படியே மாறும் இப்போது எதிர்பாராத ஒன்று நடைபெற்றது மகளின் கையைப் பிடித்தபடி இதை சொன்னதால் அவனுடைய மகள் தங்க சிலையாக மாறிப்போனால் மன்னன் அடைந்து அதிர்ச்சிக்கு அளவே இல்லை அவனின் மகளின் மீது உயிரையே வைத்திருந்தான் ஆனால் அந்த செல்ல மகளை இப்போது தங்கச் சிலையாக மாறிவிட்டாள். உடனே தேவதையை மனம் உருகி வேண்டி நின்றான் தேவதையே என்னை மன்னித்துவிடு எனது பேராசியின் காரணமாக எனது தங்க மகளை சிலையாகி விட்டேன் என்னுடைய மகளைக் காப்பாற்று மன்னனின் அழுகையை கண்டு மனம் இறங்கிய தேவதை அவன் முன் தோன்றினாள் அந்த தேவதை மன்னனின் மகளை தொட்டதும் மகள் பழைய நிலையை அடைந்தால். அன்றிலிருந்து மன்னன் செல்வத்திற்கு ஆசைப்படுகிறேன் விட்டுவிட்டு நிம்மதியாக வாழ ஆரம்பித்தான்..!!

Read Previous

வெறும் தியானம் மூலம் உங்கள் மூளையின் செயல் திறனை மேம்படுத்துவது எப்படி அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

ஒரு சக்திவாய்ந்த தொழில்முனைவோராக ஆகுவதற்கு பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிகள்..!!(படித்ததில் பிடித்தது..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular