திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரின் மனைவி காளியாதேவி (வயது 40) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். மேலும் பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூர் செல்லும் சாலையில் ஸ்ரீபாத கருப்பராயன் கோவில் அருகே வாகனத்தை இடது புறமாக நிறுத்திவிட்டு காத்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக வந்த கிரேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த காளியாதேவியின் மீது கிரேன் சக்கரங்கள் ஏறி இறங்கியது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காளியாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர்.