
- கிளாஸ் லீடரின் தண்ணீர் பாட்டிலில் விஷம் வைத்த சக மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள நாரப்பன்சாவடி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் நட்டுவம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கஸ்தூரிபட்டி அருகே உள்ள சென்ராயகவுண்டனூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவரின் மகனும் படித்து வந்துள்ளார்.
இதில் விஜயகுமாரின் மகன் கிளாஸ் லீடராக உள்ளார். இந்த நிலையில் சங்ககிரி பகுதியை சேர்ந்த இரு மாணவர்கள் அதே வகுப்பில் படித்து வந்துள்ளனர். இதில் இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி வீட்டு பாடத்தை செய்யவில்லை என கிளாஸ் லீடர் ஆசிரியரிடம் புகார் செய்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த வீட்டு படம் செய்து வராத மாணவர்கள் இருவரும் கிளாஸ் லீடர் இன் தண்ணீர் பாட்டிலில் விஷ மருந்தை கலந்துள்ளனர். இதை அறியாமல் மாணவர்கள் இருவரும் மதிய உணவு இடைவெளியில் தண்ணீர் குடித்துள்ளனர். ஆனால், அதிலிருந்து மருந்து வாசம் வருவதை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து உடனடியாக இரு மாணவர்களும் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது குறித்து கிளாஸ் லீடர் இன் தந்தை விஜயகுமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகார் அடிப்படையில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் சிறுவர்களே தண்ணீரில் விஷம் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.