![](https://tamilyugam.in/wp-content/uploads/2025/01/tamil-yugam-news-online-breaking-viral-news-channel-32-e1735917594773.jpg)
தங்கள் கணவரால்… அல்லது மனைவியால்… தாம்பத்ய உறவிற்கு ஒத்துழைப்பு இல்லாத போது… வேறு இடத்தில் தேடுவதே பெரும்பாலான விவாகரத்திற்கு காரணம்.
இதில் ஆண்கள் என்றால்… சுதந்திரமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் .. வேறு துணையை தேடி பேய் விடுவார்கள்… ஆனால்.. பெண்களுக்கு ..?
இங்கு எல்லோரும்.. தங்கள் குடும்ப மானமரியாதை எல்லாம் .. பெண்கள் விஷயத்தில் மட்டும் உறுதியாக நிற்கிறது.
உடல் பசியும்.. பலரால் கட்டுப்படுத்த முடிவதில்லை…
இந்த தாம்பத்ய உறவு உங்களுக்கு தேவை எனும் போது.. இது சரியா ..? தவறா?என்று அடுத்தவர் சொல்வது சரியில்லை…
உங்கள் உறவு அடுத்தவர்களை பதிக்காத வகையிலும்.. அந்த இளைஞர் வாழ்க்கையும் மனதில் வைத்து நடந்து கொள்வது சிறந்தது.
எனக்கு தெரிந்து தாம்பத்ய உறவில்.. கணவனுக்கு மனைவி.. என்று யாரும் இல்லை.. பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து அடுத்தவர்களை குறை சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள்..
” கிளி மாதிரி பொண்டாட்டி .. இருக்கும் போது குரங்கு மாதிரி வப்பாட்டி தேவையா.. ” என்ற வாக்கியத்திற்கு ஏற்ப
பல ஆண்கள் ஊர் மேய்வதை பார்த்து இருக்கிறேன்..
அது ஆண்களுக்கு பிரச்சினை இல்லை…
அது கேள்வியும் வராது…
என் உறவுக்கார பெண்.. எனக்கு தங்கை முறை ஆக வேண்டும்…
இவர் கணவர் தனியார் கல்லூரியில்… பணிபுரிகிறார்.
இவர் மனைவி 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார்… ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில்.. 7000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார்.
இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்… இரண்டு குழந்தைகள்..
ஒரு வருடத்திற்கு முன்பு இவர்கள் குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது..
இதில் அந்த பெண்ணுடன் பணிபுரியும்.. அந்த பெண்ணின் தோழி ஒருவர் கலந்து கொண்டார்.. அவர் அந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை தன் கணவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்…
சிறிது காலம் கழித்து.. கணவரின் நடவடிக்கைகள் மாறியுள்ளதை கண்ட மனைவி அவரின் மொபைல் போனை கண்காணிக்க..
அவர் தோழியுடன் இவர் கணவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து விசாரித்து இருக்கிறார்.. இதில் தோழியுடன் கணவர் பல நாட்களாக உறவில் இருப்பது தெரிந்ததது..
பல பிரச்சனைகளுக்கு பின்னர் இருவரையும் சேர்த்து வைத்தோம்..
ஆனால் இவரின் கணவர் திருந்துவதாக இல்லை… எவ்வளவோ அறிவுரை கூறியும் பயனில்லை தினமும் சண்டை கூச்சல் தான்.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால்…
மனைவி நன்றாக இருக்கும் போதே.. பலர் ஆண்கள் தகாத உறவு வைத்துயுள்ளார் கள்… இது விமர்சனத்திற்கு வராது… ஆண்கள் அப்படிதான்… என்று பதில் வரும்.
ஆகவே…
தாம்பத்ய உறவில்.. உங்கள் முடிவுகள் நீங்கள் எடுப்பதே சிறந்தது… அடுத்தவர்களை பார்த்து.. அடுத்தவர்களை கேட்டு நடந்து கொள்வது.. முட்டாள் தனம்.
அந்தரங்கம்.. அந்தரங்கமாக இருந்தால் மட்டுமே இனிக்கும்… அடுத்தவர் காதில் விழுந்தது என்றால்… உங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் அனைவரும் சிரிக்கும் படி ஆகிவிடும்… உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நண்பர்களுக்கு கூட சில விஷயங்களை மறைத்து வைப்பது உங்களுக்கு நல்லது.
ஒரு நல்ல மனநல மருத்துவர் மற்றும் தாம்பத்ய உறவு பற்றிய மருத்துவர்களை பார்த்து.. அவர்கள் சொல்வதை போல நடந்து கொள்வது சிறந்தது…
இதற்கு அவர்களால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். நன்றி.