கிழிந்த துணியை தைத்து மீண்டும் பயன்படுத்தினால் போனஸ்..!! வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட பிரான்ஸ் அரசு..!!

கிழிந்த துணிகளை தூக்கி எறியாமல் தைத்து மீண்டும் உபயோகப்படுத்தினால் போனஸ் வழங்கப்படும் என வித்தியாசமான அறிவிப்பை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே மக்கள் அனைவரும்  கிழிந்து போன ஆடைகள் மற்றும் தேய்ந்து போன காலணிகளை தூக்கி வீசி விட்டு புதிய ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்குவது வழக்கம். இதனை தவிர்த்து அவற்றை பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தினால் அவர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டம் ஒன்றை இப்போது பிரான்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த புதிய திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரு பழுது பார்ப்புக்கு 6 யூரோக்கள் முதல் 25 யூரோக்கள் வரை தள்ளுபடி வடிவில் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஆண்டிற்கு 7 லட்சம் டன் ஆடைகள் குப்பையில் தூக்கி எறியப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இப்படி வீணாக போவதை தடுப்பதற்காக  இப்படி ஒரு வித்தியாசமான திட்டத்தை பிரான்ஸ் அரசு தற்போது அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக அரசுக்கு 5 ஆண்டிற்கு 154 மில்லியன் யூரோக்கள் செலவாகும்.

அரசின் இந்த திட்டம் அனைவருக்கும் பிடிக்கவில்லை பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மறுபக்கம் இதற்கு ஆதரவும் கிடைத்துள்ளது.

எனவே இனி பழைய துணிகளை தூக்கி வீசாமல் மீண்டும் தைய்த்து  பயன்படுத்தினால் போனஸ் கிடைக்கும்.

Read Previous

Federal வங்கியில் junior management & Clerk வேலைவாய்ப்பு..!விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..!உடனே அப்ளை பண்ணுங்கள்..!!

Read Next

தேர்வு கிடையாது..!விண்ணப்பிக்க மறக்காதீர்கள்..! University Of Madras-ல் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular