
மக்களின் பயன்பாட்டில் அதிகம் புழக்கத்தில் உள்ளது ரூபாய் நோட்டுகள், ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பொழுதும் அல்லது பழமை அடையும் பொழுதும் நோட்டுகள் கிழிவதும் அல்லது கசங்கி விடுவதும் உண்டு, கிழிந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது என்று இன்னும் சிலருக்கு தெரிவதில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் இதனை பயன்படுத்தி நீங்கள் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்..
ரூபாய் நோட்டுகளில் எண்கள் சேதமடைந்து இருந்தால் பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம், அசோக பில்லர் சின்னம், காந்தி சின்னம் மற்றும் கையெழுத்து இவைகள் சேதமடைந்து இருந்தாலும் மாற்றிக் கொள்ள முடியும், அதிக அளவில் அழுக்கடைந்த மற்றும் தீயினால் எரியப்பட்ட நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியின் மூலம் மாற்றிக் கொள்ளலாம், வேண்டுமென்றே ரூபாய் நோட்டுகளை சேதப்படுத்தி மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வாங்கியோ அல்லது தனியார் வங்கிகளையும் பொதுத்துறைலையோ செல்லும் பொழுது நாம் மாட்டிக் கொள்வோம் உண்மையில் பழுதடைந்த நோட்டுகளை மட்டுமே ரிசர்வ் வாங்கியோ, பொதுத்துறை, தனியார் வங்கியில் ஏற்றுக்கொள்ளும், ஒரு நபர் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்..!!