கீரைகளும் அதில் உள்ள அற்புதமான பயன்களும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ..!!

 

பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையை தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச்சத்தை கூட்டி உடல் வளர்ச்சியுறவும், நோய் எதிர்ப்பு சக்தி பெறவும்  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தை தணிக்கும்.சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை – பசியைத்தூண்டும், வீக்கம் வத்தவைக்கும்;. பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும். பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும். வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.தும்பை கீரை – அசதி, சோம்பல் நீக்கும்.கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும். முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். முடக்கத்தான்கீரை – கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். தூதுவளை – ஆண்மை தரும். சருமநோய், சளித்தொல்லை நீக்கும். மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும், மூலநோயைக் குணப்படுத்தும்.

Read Previous

எவ்வளவு இதய அடைப்பு இருந்தாலும் நீக்கும் அற்புத பானம்..!!

Read Next

காலப்போக்கில் மறந்துபோகும்..!! மரத்துப்போகும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular