Oplus_131072
உடலில் முக்கியமான உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும். இதன் அனைத்து பணிகளையும் மருத்துவ அறிவியல் உலகம் இன்னும் கண்டறியவில்லை. அத்துடன் கல்லீரலைச் சுத்தப்படுத்தும் வழிகளையும் இன்னும் ஆங்கில மருத்துவம் கண்டறியவில்லை இந்த கீழாநெல்லி கல்பமானது ஈரலைப் பலப்படுத்துவதாகும். கொழுப்பு செரிக்கவில்லை என்பவர்கள் இதனை உண்ண அச்சிக்கல் சரியாகும். குடிப்பழக்கத்தால் கெட்டுப்போன ஈரலையும் கூட இக்கல்பம் உண்பதன் மூலம் சரிப்படுத்தலாம்.
தேவையானவை.
கீழாநெல்லி ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அளவு
மோர் 100 மி.லி.
செய்முறை
கீழாநெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் நீரில் நன்கு அலசவேண்டும். பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நசுக்கிக் கொள்ளவும். அதனை மோர் விட்டு அம்மியிலோ மிக்சியிலோ அரைக்கவும். ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
உண்ணும் முறை:
காலை வெறும் வயிற்றில் இந்த கல்பத்தை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு குவளை மோரில் கலந்து பருகவும். இது பருகும் நாளில் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
செயல்பாடு மேலும் மோர் ஒரு அனுபானமாகும். மோருடன் கலந்து குடிப்பதால் கல்பத்தின் கூடுகிறது கீழாநெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் பச்சையாகவும் உண்ணலாம். சாதாரணமாக குறைந்தபட்சம் ஒருவாரம் உண்டால் போதும் கல்லீரலில் தங்கியுள்ள ஹெப்படடைஸ் பி. போன்ற வைரஸ்களை நீக்கிட மற்றும் மஞ்சள்காமாலை நோயைப் வேண்டுமானால் 40 நாட்கள் உண்ணவேண்டும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள பிலுரூபின் (BLIRUBIN)ஐ குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்……




