குக்கரில் அரிசி, பருப்பு வைத்தால் தண்ணீர் வெளியேறுகிறதா..?? இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

 

குக்கர் தண்ணீர் வெளியேறும் பட்சத்தில், பருப்பு வைத்து இருந்தால், குக்கருக்குள் சிறிய கிண்ணத்தை போட்டு வைக்கவும். தண்ணீர் வெளியேறாது. இவ்வளவு சிக்கல் எதற்கு, தண்ணீர் வெளியேறினால், கேஸ்கட் மாற்றுங்கள் அல்லது பழுதுபார்க்கவும்.

பிரஷர் குக்கரில் அதிக தண்ணீர் சேர்த்து, அதிக தீயை வைத்தால், விசிலுடன் தண்ணீரும் வெளியேறும். எனவே குக்கரில் உணவு சமைக்கும் போது சரியான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

அரிசியை சமைக்க குக்கரை ஸ்டவ் மீது வைக்கும் போது, கேஸ் தீயை அதிக அளவில் வைக்க வேண்டாம். இதனால், குக்கரில் உள்ள தண்ணீர் விசில் மூலம் வெளியேறும். எனவே, உணவை மிதமான சூட்டில் சமைக்கவும். அரிசியை சமைக்க குக்கரை வைக்கும் போது தீயை அதிகமாக வைக்காமல், அளவான தீச்சுடரில் சமைக்கவும். அப்படி செய்தால் தண்ணீர் வெளியேறாது.

குக்கரின் விசிலில் சாதம், பருப்பு போன்ற பொருட்கள் சிக்கிக் கொள்ளும். இது அழுக்காக மாறிவிடும். இதனாலும், குக்கர் விசில் வரும்போது தண்ணீரும் வெளியேறும். எனவே பிரஷர் குக்கர் விசிலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்…

Read Previous

மனதை அடக்கும் வழிமுறை

Read Next

தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular