
குக்கர் மத்தி மீன் குழம்பு சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான இந்த குக்கரில் செய்யும் மத்தி குழம்பை நானும் இன்று செய்து பார்த்தேன்
அரை கிலோ மத்தி மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
அரைப்பதற்கு 👇
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு ஐந்து பல்
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
அரைத்த மசாலாவை மீனில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடியும் கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கி மசாலா சேர்த்த மீனையும் சேர்க்கவும்
பாதி லெமன் அளவு புளியை கரைத்து சேர்க்கவும்
குக்கரை மூடி குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான குக்கர் மத்தி தயார்..