குக்கர் விஷயத்தில் அலட்சியமாக இருக்குறீங்களா?: சமையலின்போதே வெடித்துசிதறிய குக்கர்..!! அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!!

சரியாக குக்கரை பராமரிக்காவிடில் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து வீடியோவுடன் எச்சரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

பஞ்சாப்   மாநிலத்தில் உள்ள பட்டியாலாவில் குடும்பத்தினர் தங்களின் வீட்டில் வழக்கமான சமையல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். வீட்டின் குடும்ப தலைவரும் இருந்துள்ளார். இந்நிலையில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த குக்கர் திடீரென வெடித்து சிதறியது. இதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் ஒரு கணம் அதிர்ந்து போயினர்.

நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் ஆன காயங்கள் ஏற்படவில்லை. இது குறித்து காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. குக்கர் வெடிப்பதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் குக்கரை சரியாக கையாளதது விபத்தின் காரணமாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இது போன்ற சம்பவத்தில் குக்கர் வெடித்து 47 வயதுடைய பெண்மணி பரிதாபாய் உயிரிழந்துள்ளார். குக்கரின் சில பாகங்கள் அவரின் உடலில் ஒட்டிக்கொண்டு தீக்காயத்தையும் ஏற்படுத்தியதால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக்கரை சரியாக கழுவாத பட்சத்திலும் அதன் வாசல் சரிவராத சரிவர பொறுத்தா வில்லை என்றாலும் குக்கர் வெடிக்கும் ஆபத்து அதிகம் குக்கரில் விசில் அடிக்கும் துளை சரியாக உள்ளதா, காற்று வெளியேறுகிறதா ,என்பதை சோதித்த பின்னரே அடுப்பில் வைத்து உபயோகம் செய்ய வேண்டும்.

அதேபோல் அளவுக்கு அதிகமான நேரம் குக்கரை தொடர்ந்து தீயில் வைத்து குக்கருக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் வெந்தும் நீராவியாக வெளியேறியும் கவனிக்காமல் விட்டால் வெடிக்கும் ஆபத்து அதிகம் ஆகையால் நமது சிறு அலட்சியமும் குக்கர் வெடிப்புக்கு ஒரு வழி செய்யும் என்பதால்கவனம் அதிகம் தேவை.

Read Previous

அவுங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்.!!

Read Next

கருவை கலைக்க அனுமதி கேட்டு நீதிபதி முன் விஷம் குடித்த இளம்பெண்..!! பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு நடந்த சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular