குடலில் மலம் தேங்கி உடல் உபாதை ஏற்படுகிறதா..? இதை ட்ரை பண்ணி பாருங்க குடலில் உள்ள மொத்த மலமும் வெளியேறிவிடும்..!!

நமது குடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குடலில் உள்ள இந்த தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மலச்சிக்கல் பாதிப்பால் அவற்றை முழுமையாக கழிக்க முடியாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

நம்மில் பலர் காலை நேரத்தில் மலம் கழிக்க சோம்பல் பட்டுக்கொண்டு அடக்கி வைத்து விடுவதால் அவை மலச்சிக்கலாக மாறி விடுகிறது. அது மட்டும் இன்றி நார்ச்சத்து இல்லா உணவுகளை உண்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த மலச்சிக்கல் பிரச்சினைக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது நன்று.

தீர்வு 1

தேவையான பொருட்கள்

  1. கடுக்காய் பொடி 100 கிராம்
  2. ஓமம் 50 கிராம்

செய்முறை

கடுக்காய் மற்றும் ஓமத்தை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை இரவு உறவுக்குப் பின் 100 மில்லி சுடுதண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் அடியோடு குறையும்,

தீர்வு 2

தேவையான பொருட்கள்

  1. கடுக்காய்,
  2. நெல்லிக்காய்,
  3. தான்றிக்காய்

செய்முறை

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காயை காயவைத்து பொடி செய்து கொள்ளவும் இந்த பொடியை இரவு நேரத்தில் அரை ஸ்பூன் என்ற வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாய் குணமடையும்.

தீர்வு 3

தேவையான பொருட்கள்

  1. அத்திப்பழம்
  2. பப்பாளி பழம்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு அத்திப்பழம் மற்றும் ஒரு கீற்று பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு உடனடியாய் நீங்கும்.

Read Previous

தெற்கு ரயில்வேக்கு இப்படியொரு கெளரவம்…!!

Read Next

தீராத மூட்டு வலியை ஒரே நாளில் குணமாக்கும் மேஜிக் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular