
இன்றைய காலகட்டத்தில் பலரும் ஊர் பயணங்கள் அல்லது ஏதோ ஒரு தேவைக்காக தொழிலுக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது அப்படி செல்லும் போதெல்லாம் சொந்த ஊரிலிருந்து குடிநீரை எடுத்து செல்ல முடியாது செல்லும் ஊரிலேயே குடிநீரை குடிக்கும் வழக்கத்திற்கு நாம் ஆனால் அப்படி மாறும் பட்சத்தில் அந்த ஊர் குடிநீர் குடிக்கும் போது குடிநீரை சளி காய்ச்சல் மற்றும் சைனஸ் தொல்லைகள் ஏற்படுகிறது இதனால் காரணம் தெரியாமல் மருத்துவரை அணுகுவது உண்டு இதற்கு காரணம் தெரிந்து தீர்வு கொள்வோம் ..
ஒரே ஊரில் இருக்கும் தண்ணீரை அருந்தி பழகியவர்களுக்கு, அடுத்த ஊர் தண்ணீர் அருந்தும் பொழுது சளி பிடிக்கிறது.
சிலர் கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து பழகி வருவார்கள். திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அவர்களுக்கு சளி பிடிக்கும். இப்படி நாம் அருந்தும் நீரை மாற்றி அருந்தும் போது சளி, காய்ச்சல் உண்டாவதற்கான காரணங்களை பார்ப்போம்.
சளி, காய்ச்சலுக்கு காரணம்
கொதிக்க வைத்த தண்ணீரில் எந்த ஒரு தாதுப் பொருட்களும் இல்லாமல் பல வருடங்களாக குடித்து வரும் பொழுது அவரது உடலில் உள்ள இரத்தத்தில் பல தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் நோய்வாய்ப் பட்டிருக்கும். ஒரு நாள் திடீரென கொதிக்க வைக்காத தண்ணீரை குடிக்கும் பொழுது அதில் பல விதமான தாதுப்பொருட்களும், சத்துப் பொருட்களும் இருக்கும். அதை அவரது சிறுநீரகம் எடுத்து இரத்தத்தில் கலந்து விடும்.
பல வருடங்களாக இரத்தத்தில் சில பொருட்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் திடீரென சில நல்ல பொருட்கள் இரத்தத்திற்குள் நுழைந்தவுடன் நமது உடலில் பல வருடங்களாக கழிவுகளை நீக்க வேண்டிய வேலையை இந்த தாதுப் பொருட்களை வைத்து கழிவுகளை வெளியேற்ற ஆரம்பிக்கிறது. இப்படி கழிவுகளை வெளியேற்றும் போது அது சளி வழியாகவோ அல்லது காய்ச்சல் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ அனுப்பும். இதை நாம் நோய் என்று நினைத்து பயந்து விடுகிறோம்.
தண்ணீரை மாற்றினால்
எந்த ஊர் தண்ணீரையும் மாற்றி மாற்றி அருந்தினால் ஒருவருக்கு சளியும் பிடிக்காமல் காய்ச்சலும் வராமல் எந்த வித உபாதையும் செய்யாமல் இருந்தால் அவருக்கு உடல் நிலை சரியாக இருக்கிறது என்று அர்த்தம். தண்ணீரை மாற்றிக் குடித்தால் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி பிடிக்கிறது என்றால் அவர் உடலில் பல நோய்கள் உள்ளது. அதை குணப்படுத்த தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை இரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்றவை எடுக்கத் தேவையில்லை. தண்ணீரை மாற்றிக் குடிக்கும் போது சளி பிடித்தாலே உங்கள் உடலில் நோய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்…!!