
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளப் பிள்ளையார் கோவிலில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்பட்டு ஊருக்குள் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலி குணங்களுடன் அந்தியூர் மைசூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்த தொடங்கினர் காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் பெரும் அவதி அடைந்தனர் சாலையில் வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது இது குறித்து தகவல் அறிந்து வந்த அந்தியூர் காவல்துறையினர் மற்றும் வட்டாட்சிய வட்டார வளர்ச்சி அலுவலர் கெட்டி சமுத்திர ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவர் மாறன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் அப்பொழுது அப்பகுதி பெண்கள் தெரிவிக்கையில் எங்களுக்கு சீரான குடிநீர் இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றோம் என தெரிவித்துள்ளனர் அதிகாரிகள் உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்துக்கு பாதிப்பு