
மணமகன் ஒருவர் குடித்துவிட்டு மது போதையில் தனது திருமணத்தையே மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த மியான்கி என்பவருக்கும், சுல்தாங்கஞ்ச் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை முகூர்த்த நேரத்தில் மணமகனுக்காக திருமண வீட்டார் காத்துக் கொண்டிருந்தனர். முகூர்த்த நேரம் முடிந்த போதும், மணமகன் வராததால் மணமகள் குடும்பத்தினர் கவலையடைந்தனர். மதியம் வெகு நேரம் கடந்து, மது அருந்திவிட்டு திருமண மண்டபத்துக்கு புது மாப்பிள்ளை வந்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்திவிட்டு புறப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.