
நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட 6 மத சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க உள்துறை அமைச்சகம் இணையதள முகவரி வெளியிட்டுள்ளது. indiancitizenshiponline. nic. in என்ற இணையதள முகவரியை வெளியிட்டு, இந்திய குடியுரிமை விரும்புவோர், அதில் விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.