குடியுரிமை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாள துணை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

  • பதவியை ராஜினாமா செய்தார் நேபாள துணை பிரதமர்.

குடியுரிமை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாள துணை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.நேபாள குடியுரிமை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாள துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ரபி லாமிச்சானே தனது பதவியை ராஜினாமா செய்தார். லாமிச்சானே 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து நேபாளத்திற்கு திரும்பினார்.

அப்பொழுது அவர் அமெரிக்க குடிமகனாக இருந்தார். 2018 ஆண்டு அவர் தனது அமெரிக்க குடி உரிமையை உதறி தள்ளினார்.நேபாளத்திற்கு வந்த பிறகு அவர் தனது நேபாள குடி உரிமையை பெறுவதற்கு விண்ணப்பிக்க வில்லை. ரபி லாமிச்சானேவின் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 20 இடங்களைக் கைப்பற்றியது. அவரது கட்சி கூட்டணி அரசாங்கத்தில் இணைந்த பின்னர் நேபாள துணைப் பிரதமராக ரபி பதவி ஏற்றார்.

குடியுரிமை பெற்றிருந்தால், நேபாளத்தில் தேர்தலில் போட்டியிடவோ, பதவியில் வகிக்கவோ முடியாது. இதனால், அமெரிக்க குடியுரிமையை ராபி லாமிசான் கைவிட்டிருந்தார்.

அதே நேரத்தில், நேபாள குடியுரிமையை வாங்க ராபி லாமிசென் விண்ணப்பிக்கவில்லை.இதனால், எந்த குடியுரிமையும் இல்லாத ராபி லாமிசானை துணை பிரதமர் பதவியில் இருந்தும், எம்பி பதவியில் இருந்தும் உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.நேபாள குடியுரிமையை பெற்ற பிறகு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பின்னர் லாமிச்சானே செல்லாத குடியுரிமை ஆவணங்களுடன் தேர்தலில் நின்றார் என்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாள உச்ச நீதிமன்றம் அவரை பதவியில் இருந்து விலக்கியது. உச்ச நீதிமன்றம் அவரை பதவியில் இருந்து விலக்கியதை அடுத்து லாமிச்சானே தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் புஷ்ப கமல் தஹாலிடம் சமர்ப்பித்தார்.

Read Previous

பழனி முருகன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை மற்றும் தைப்பூசத் திருவிழாவால் எந்த தடையும் இல்லாமல் ஆகம விதிப்படி நடைபெறும்..!! அறநிலையத்துறை தகவல்..!!

Read Next

அமெரிக்க வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஜெஃப் ஜியன்ட்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular