குடியைக் கெடுத்த குடி..!! குடிபோதையில் பெற்ற தாயை அறிவாளால் வெட்டிய மகன்..!!

குடியினால் பல்வேறு குடும்பங்கள் சீர் அழிந்து வருகிறது அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது இப்பதிவு. ஈரோடு மாவட்டத்தில் பெற்ற தாயை போதையில் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார் மகன். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி- சாவித்திரி தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே குடிப்பழத்திற்கு ஆளான பழனிச்சாமி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தனது தாய் பாப்பாத்தி இடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சமீப காலமாகவே இருவரும் தங்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளனர். அதற்கு முன்பாக ஒரு லட்சம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை பழனிச்சாமி தனது தாய் பாப்பாத்தி இடம் விவசாய நிலம் விற்ற மீதி பணத்தை வாங்கி தன்னிடம்  தரும்படி கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது, சற்று நேரத்தில் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி வீட்டில் இருந்து அறிவாளை எடுத்து பெற்ற தாய் பாப்பாத்தி சரமாரியாய் வெட்டினார். இதில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்தார்.

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாப்பாத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்து அவரை போலீஸ் சிறையில் அடைத்துள்ளனர் .பெற்ற மகனே பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஜியோ ஏர்டெல் தொடர்ந்து VI-இன் புதிய கட்டடங்கள்..!! அறிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

ஜூலை மாதம் வரவுள்ள குப்த நவராத்திரி..!! எப்போது தொடங்கும்..? முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular