குடும்பத்தில் குறையாத மகிழ்ச்சி பொங்க என்ன செய்யலாம் அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

வீடு என்பது எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பது முக்கியமல்ல அதில் எவ்வளவு சந்தோஷம் நிறைந்திருக்கிறது என்பதுதான் முக்கியம். வீடு என்பது நம்முடன் சேர்ந்து வாழும் மனிதர்களால் முழுமை அடைகிறது அது தங்குவதற்கான கூடாரம் மட்டுமல்ல நம்முடன் சேர்ந்து வாழும் மனிதர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நானும் சந்தோஷமாக இருப்பது தான்…

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான குறிப்புகள் : வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பது அவசியம் கணவனோ மனைவியோ யாராக இருந்தாலும் குடும்ப நிர்வாகத்தை முழுமையாக பொறுப்பேற்று நடத்தும் பொழுதில் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம் அவர்களின் மனமும் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்…

அவசர முடிவுகள் கூடாது : அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சிறப்பாக இருக்காது எதையும் நின்று நிதானித்து சிந்தித்து எடுக்க முடிவுகள் நல்லதாக இருக்கும். வீட்டில் உள்ள மற்றவர்களின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவுகள் சிறப்பாகவே அமைகிறது..

மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாக்குவது : குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவது நம் கையில் தான் உள்ளது மகிழ்ச்சியின் அலைகள் நம் மீது விழ முதலில் நம்மை நாம் நேசிக்க தொடங்க வேண்டும். வாழ்க்கையை முழுமையாக வாழ சந்தோசம் நிம்மதி அவசியம் தேவை இல்லாத விஷயங்களுக்கு கோவப்படுவதும் வருத்தப்படுவதும் மகிழ்ச்சியான சூழலை பாதிக்கும். நிதானத்துடன் சமநிலையுடனும் விஷயங்களை கையாளும் பொழுது பிரச்சனைகள் பெரும்பாலும் குறையும்.

சுற்றத்தாருடன் பழகுதல் : உறவினர்கள் நண்பர்களுடன் நல்ல ஒரு பந்தத்தை அமைத்துக் கொள்வது ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும் அடிக்கடி சிந்தித்து உறவையும் நட்பையும் வளர்த்துக் கொள்வது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் முடிந்த அளவு அனைவரிடமும் அன்புடனும் கருணையுடனும் இருப்பது மகிழ்ச்சியான சுழலை உண்டாக்கும்..

சின்ன சின்ன சந்தோசங்களையும் அனுபவித்தல் : சிலர் எப்போதும் வேலை வேலை என்று வாழ்நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பார்கள். அப்படி நம்மை தியாகியாக உருவகப்படுத்திக் கொண்டு சின்ன சின்ன சந்தோஷங்களையும் தூக்கி எறிய வேண்டாம். சமயம் கிடைக்கும் பொழுது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள், மனைவி குழந்தையுடன் உட்கார்ந்து பேசுவது சின்ன சின்ன அவுட்டிங் செல்வது என சந்தோஷங்களை அனுபவியுங்கள்..

பாரபட்சம் இன்றி எந்த விஷயத்தையும் சமநிலையுடன் அணுகுவது அவசியம் கடினமான சூழ்நிலையிலும் அமைதி மற்றும் சமநிலையை வெளிப்படுத்தும் திறன் முக்கியம். பலத்த காற்றிலும் கூட நிமிர்ந்து சமநிலையில் இருக்கும் பாய்மர படகின் பாய் மரங்கள் காற்றில் அசைந்தாலும் அவை மையமாகவே இருக்கும். அதுபோல கடினமான சூழ்நிலைகள் எதார்த்தத்தை புரிந்து கொண்டு உணர்ச்சிவசப்படாமல் உறுதியுடன் சமநிலையில் செயலாற்ற வேண்டும்..!!

Read Previous

தப்பி தவறி கூட இந்த திசையில் செருப்பை கழட்டாதிங்க ; கழட்டுனா அவ்வளவுதான்..!!

Read Next

சாணக்கிய நீதி படி பெண்களின் உண்மையான குணத்தை அவங்க உடலில் உள்ள இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular