குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மகளை கொன்று துக்க செய்தி அனுப்பிய தாய்..!! கள்ளகாதலால் சோகம்.!!

மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர் சமய முத்து. இவரின் மனைவி மலர் செல்வி, இந்த தம்பதிக்கு ஏழு வயதுடைய மகள் மற்றும் ஐந்து வயதுடைய கார்த்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

குடும்பத்தில் எதிர்காலத்திற்காக சமயமுத்து துபாயில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடைய மதுரையில் குழந்தையுடன் வசித்து வந்த மலச்செல்விக்கு தர்ம சுந்தர் (வயது 26) என்ற இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாய் மாறியது. இதனால் கள்ள காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் உல்லாசமாய் இருந்தனர். இதனிடையே கடந்த மே 22ஆம் தேதி கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருந்ததை ஐந்து வயதுடைய சிறுமி நேரில் கண்டுள்ளார்.

இதனால் மகள் வெளியே விஷயத்தை சொல்லிடுவார் என்று பயந்து மலர்செல்வி நேற்று மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின் ஊரை நம்ப வைக்க மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணை நடத்திய போது சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மலச்செல்வியிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் 26 வயதாகும் தர்ம சுந்தருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. கள்ளக்காதல் விவகாரத்தால் இரண்டு குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

Read Previous

“தள தள”வென இருக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஜி.வி.பி பட நடிகை.!! மயங்கிய ரசிகர்கள்.!!

Read Next

ரூ.5000க்கு ஆசைப்பட்டு பணம் இழந்த இளைஞர்..!! முதல்வர் போட்டோவுடன் வைரலாகும் பணம் பறிக்கும் லிங்க்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular