
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் தனுஷ் இயக்கிய காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. நல்ல நடிகை என்றாலும் இவருக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவரின் முகத்திற்கு கிராமப்புற கதைகளே செட்டாகும் என்பதால் அது போன்ற வேடங்கள் மட்டுமே அவரைத் தேடி வந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, கணவர் பெயர் ரண சிங்கம், இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு விஜய் சேதுபதி வெவ்வேறு நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கியதால் இவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தனுஷின் வடசென்னை திரைப்படத்தில் சென்னை மொழியில் கெட்ட வார்த்தை எல்லாம் பேசி அதிர வைத்தார். தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகின்றார். ஆனால் அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இதுவரை கிடைக்கவில்லை.
சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி கிளாமர் லுக்கில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
View this post on Instagram