குடும்ப சண்டையில் கொடூரம்; மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மருமகன்..!! மனைவியின் உயிர் ஊசல்.!! திண்டுக்கல்லில் சோகம்.!!

தம்பதிகளுக்கு இடையே நடந்த குடும்ப சண்டையில் மாமியார் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பழனியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கலிக்கநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (வயது 45) இவரின் மகள் நிவேதா (வயது 26) இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் கொடுக்கம்பட்டி பகுதியை சார்ந்த ஜெயபால் (வயது 34)  என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தனர்.

தம்பதிகள் இருவரின் அன்புக்கு அடையாளமாய் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தம்பதிகளுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக நிவேதா பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் ஜெயபால் மாமியாரின் வீட்டிற்கு வந்தார். அங்கு புகார் தொடர்பாக தனது மாமியார் மற்றும் மனைவி ஆகியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.தான் மறைத்து எடுத்து வந்த அரிவாளால் அவர்கள் இருவரையும் சரமாரியாய் வெட்டினார்.

இந்த கொடூர சம்பவத்தில் சித்ரா நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். நிவேதா படுகாயத்துடன் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பழனி நகர காவல் துறையினர் ஜெயபாலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெயரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

இரயில் பயணத்தில் சாகசம்..!! ஓடும் இரயிலில் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.!!

Read Next

தேர்வு முடிவை தெரிந்துகொள்ளாமலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்..!! சென்னையில் சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular