குடும்ப பிரச்சனையில் நடந்த கொடூரம்..!! வீடுபுகுந்து அரங்கேறிய படுகொலை சம்பவம்.!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சி மாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் (வயது 50). இவர் நெய் வியாபாரியாக பணிபுரிந்து வருகிறார். வேலங்குளம் பகுதியை சார்ந்தவர் வேல்பாண்டி. இவர்கள் உறவினர்களான இருந்தாலும் இரு குடும்பத்தாருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிலிருந்த வேல்முருகனை வேல்பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் மனைவி திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருப்பாச்சேத்தி காவல்துறையினர் வேல்பாண்டி, சிங்கமுத்து, சிவ பாலமுருகன் மற்றும் சமய துறை ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Read Previous

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது கிழவன்..!! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!!

Read Next

காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்..!! நெல்லையில் பகீர் சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular