
- உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் குடைமிளகாயின் பயன்கள்.
நிறைய உணவுகளில் கண்கவர் வண்ணங்களுக்காக சேர்க்கும் குடைமிளகாயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கலாம்.குடைமிளகாய் இரத்தத்தில் தேவை இல்லாத நிறைவுற்ற கொழுப்பு என்று சொல்லப்படும் டிரைகிளிஸரைட்ஸின் உயர்வை கட்டுப்படுத்தி உடலின் மெட்டபாலிஸத்தை ஊக்குவிக்கிறது.
இதனால், உடல் எடைக்குறைப்புக்கு உதவிசெய்கிறது. குடைமிளகாயில் கரோட்டினாய்ட்ஸ், கேப்சைஸின் போன்ற மூலக் கூறுகள் இருப்பதினால் புற்றுநோய் செல்கள் பரவுவதை கட்டுப்படுத்தி மேலும் வளரச் செய்யாமல் புற்றுநோய் கட்டிகளாக வளரவிடாமல் தடுக்கிறது.
முக்கியமாக உணவுக்குழாயில், விரைப்பையில், கணையத்தில், கர்ப்பப்பைவாயில் வரக்கூடிய புற்றுநோய்களைத் தடுக்கிறது.
குடைமிளகாயில் உள்ள ஃபைட்டோனூட்ரியன்ட்ஸ் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் செல்களை பாதுக்காப்பதால் இதய செயல்திறன் கூடுகிறது. குடைமிளகாயில் உள்ள கேப்சஸின் என்ற மூலக்கூறு சிறந்த வலி நிவாரணியாக விளங்குகிறது.