
மத்தியபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் குடையுடன் வகுப்பறையில் அமர்ந்துள்ள புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஏழை குடும்பத்தை சார்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக அரசு பள்ளியின் மேற்கூரை நீர் கசிந்து வகுப்பறையில் நீர் சொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் குடையினை வைத்துக்கொண்டு வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்து வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா தெரிவிக்கையில் “சேதமடைந்த பள்ளிகளில் விரிவான சீராக்கும் பணிகள் தொடரும். மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சீரமைப்பதற்கான செலவுகள் குறித்து எழுத்து பூர்வ அறிவிக்கை ஒன்றை கேட்டுள்ளோம். விரைவில் சேதம் அடைந்த பள்ளிகள் அனைத்தும் சீரமைக்கப்படும். இதனால் மழைக்காலங்களில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படாமல் இது போன்ற இன்னங்களை மாணவர்கள் சந்திப்பதை தவிர்க்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.