
பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசபுலேட்டி கவர்ச்சியான முறையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கி வருபவர் ரேஷ்மா பசபுலேட்டி. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். இவர் பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளரான பிரசாந்த் பசபுலேட்டியின் மகள் ஆவார்.
இவர் தனது பள்ளி படிப்பை அமெரிக்காவில் முடித்திருக்கின்றார். பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.
அதன் பிறகு ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கின்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வந்த லவ் என்கின்ற சீரியலில் நடித்தார்.
அதன் பிறகு சன் டிவியில் வாணி ராணி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
பின்னர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீதாராம் சீரியலிலும் நடித்து வந்தார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரேஷ்மா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது டவுசரில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram