குட்டி தாதாவான விவசாயி; வளர்ச்சி பொறுக்காமல் போட்டுத்தள்ளிய நண்பன்.. தஞ்சாவூரில் பதறவைக்கும் சம்பவம் அம்பலம்.!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் வென்குடி பகுதியை சார்ந்த நபர் கோபி இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதமாக அம்மாபேட்டை பகுதியில் உள்ள அத்தையின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சம்பவத்தின் அன்று இரவு நண்பர்களோடு மதுபானம் குடித்த கோபி கொடூரமாய் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கோபியின் ரவுடி வாழ்க்கை அம்பலமாகியுள்ளது. ரவுடி கோபி மீது கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் உள்ளது. இதனால் இறுதியாக கோபியுடன் மது அருந்திய அவரின் நண்பர்கள் ஆனந்த் பாபு, மதன், பிரவீன் ஆகிய மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கோபி மற்றும் கைதாகிய மூன்று பேரும் சேர்ந்து பல கொலைகள் செய்துள்ளனர் 2020 ஆம் ஆண்டு ஆனந்த்பாபு என்பவரை கள்ளக்காதல் விவகாரத்தில் நல்லூர் பகுதியில் வைத்து ஓட ஓட விரட்டி கொலை செய்தது இந்த குழு தான். கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கோபி. ஆனந்த்பாபு ஜாமினில் வெளியே வந்து மீண்டும் ரவுடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே உள்ளூரில் யார் கெத்து? என்கின்ற போட்டி ஏற்பட இருவருக்கும் ஏற்பட்டுள்ளது.இதனால்   இருவரும் தனித்தனியாக களமிறங்கியுள்ளனர், கோபியின் செயல்பாடுகளில் அடுத்த தாதாவைப் போல அமைந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று இரவு கோபியை மதுபான பார்ட்டி என அழைத்த ஆனந்த் பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்பவத்தினை அரங்கேற்றியுள்ளார்.கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்ற பழமொழிக்கேற்ப இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read Previous

திருமணமாகி 2 மாதம், மனைவிக்கு 4 மாதம்.. விருப்பமில்லாமல் நடந்த கட்டாய திருமணத்தில் விபரீதம்.. பெண் கொடூர கொலை.!!

Read Next

ஜாலியா இருக்கலாம் வா.. மனைவியை ஓரமாக அழைத்து கல்லைப்போட்டு கொன்ற கணவன்; சந்தேக நோயால் வெறிச்செயல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular