
பேச்சுலர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. படத்தில் சில கிளாமர் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருடைய ரசிகர்கள் மத்தியில் ரணத்தை உருவாக்கியது என்பது தான் உண்மை.
இந்த படம் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. குறுகிய காலத்திலும் சரி தமிழில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கையிலும் சரி இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்துள்ளார் என்றால் அது பலருக்கும் ஆச்சரியம்தான்.
மாடலிங் துறையில் இருந்தது திவ்யபாரதி அதன் பிறகு சினிமா உலகில் கால் பதித்தார். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பல நடிகைகளை கூட இன்ஸ்டாகிராமில் இவ்வளவு ரசிகர்கள் பின் தொடர்வது இல்லை.
ஆனால் திவ்யபாரதிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திவ்யபாரதி நடித்து வருகின்றார். இவர் இறுதியாக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் மதில் மேல் பூனை மற்றும் ஆசை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது குட்டையான உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram