
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி வெளியான படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் இந்த படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது. என்னதான் கதைக்களம் பெரிதாக இல்லை என்ற குற்றச்சாட்டு வந்தாலும் ரசிகர்களுக்கு இது ஒரு ஃபுல் மில்ஸ் ஆக தான் இருக்கிறது.
அந்த வகையில் குட் பேட் அக்லியின் இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளிவந்துள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 30.9 கோடி வசூல் செய்தது என்று அதிகாரப்பூர்வமாக தகவல் நேற்று வெளிவந்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் உலக அளவில் இரண்டு நாட்களில் சுமார் 90 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்போது கவனமெல்லாம் குடும்ப ரசிகர்களிடம் தான். அவர்களிடம் கலவையான விமர்சனங்கள் தான் வருகின்றது என்ற வேளையில் அடுத்த மூன்று நாட்களில் பெரும் வசூல் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.