குட் பேட் அக்லி திரைப்பட விமர்சனம்..!! அஜித்துக்கு வெற்றி படமா இல்லை அடுத்த தோல்வி படமா..!!

அஜித் குமாரின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ஜிவி பிரகாசி இசையில் உருவாகி இன்று திரைக்கு வந்த திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மேலும் முன்பதிவு ஓப்பனாகி சில மணி நேரங்களிலேயே மொத்தமாக டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ரசிகர்கள் பெரும் ஆறவாரத்தில் இருந்தனர். கடைசி சில படங்கள் அஜித்திற்கு சரியாக போகாத நாள் இந்த படம் நிச்சயம் மாஸாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தது உண்மையிலேயே அந்த படத்தில் இருக்கிறதா இல்லை இதுவும் அடுத்து அஜித்திற்கு தோல்வி படமாக அமைந்திருக்கிறதா என்று பார்ப்போம்.

தனது பையனுக்காக முன்னாள் கேங்ஸ்டர் மீண்டும் வன்முறையை கையில் எடுக்கும் கதையே இந்த குட் பேட் அக்லி ஆகும். இந்தப் படத்தில் பழைய அஜித்தை ஆதிக் வெளிப்படுத்தி உள்ளார். இந்த படம் ஒரு சரியான ஃபேன் பாய் சம்பவமாக கருதப்படுகிறது. படத்தின் இடைவெளி காட்சிகள் மாஸாக இருந்தது. மேலும் வில்லனாக அர்ஜுன் தாஸ் தனது பங்களிப்பை அருமையாக வழங்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் தனது இசையில் மக்களை மிரள வைத்திருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் எந்த ஒரு எமோஷனல் கனெக்ட்டும் இல்லை. அது மட்டும் இல்லாமல் கதைகளம் பெரிதாக இல்லை என்று அனைவராலும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு வந்துள்ள மதிப்பெண்கள் 6/10 ஆகும்.

Read Previous

பீட்ரூட் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேரப் போகும் நமக்கு மிகவும் பிடித்த விளையாட்டு..!! என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular