
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் ஊராட்சி உட்பட்ட கத்திரிப்பள்ளி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார் சாலை போடபட்டது. இந்த சில ஆண்டுகளிலேயே சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி உள்ள நிலையில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அவ்வப்போது வாகன ஓட்டிகள் கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவதே தொடர் கதையாகி வருகிறது. குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது