
பாட்டி வைத்தியத்தில் குப்பைமேனி இலைகளுக்கு முக்கிய இடம் உண்டு சளி பிடித்தால் காய்ச்சல் அடித்தால் அந்த காலத்தில் குப்பைமேனி இலைகளை அரைத்து சிறிய சங்கில் வாயில் ஊற்றுவார்கள் குப்பைமேனி இலைகள் ஒரு நாளிலேயே உடம்பில் மாயாஜாலம் நிகழ்த்திக் கூடியவை…
நம்முடைய முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக மருத்துவ பயன்களுக்கு பயன்படுத்திய தாவரங்களில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி செடியை அரிமஞ்சரி என்றும் அழைக்கின்றனர் இதன் பெயர் காரணமாகவோ என்னவோ குறைந்த அளவிலேயே குப்பைமேனி இலைகள் காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் ஆசை கண்டத்தின் ஒரு சில பகுதிகளில் காணப்படும் இந்த மூலிகை தாவரம் அதன் மருத்துவ பண்புகளுக்காக பெயர் பெற்றது சித்தா ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக குப்பைமேனி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டில் பாட்டியிடம் குப்பைமேனி பற்றி கேட்டுப்பாருங்கள் வரிசையாக அதன் மருத்துவ பயன்களை அடுக்குவார்கள்..
குப்பைமேனி இலைகளின் மருத்துவ பயன்கள் காய்ச்சலுக்கு குப்பைமேனி தான் : குப்பைமேனி இலைகளில் உடல் வெப்பத்தை தணிக்கும் பண்புகள் இருக்கின்றன காய்ச்சல் அடித்தால் பாட்டியிடம் சொல்லுங்கள் அவர்கள் முதற்க்காரியமாக குப்பைமேனி இலைகளை அரைத்து சிறிய சங்கில் வாயில் ஊற்றுவார்கள் இதை குறித்த சில மணி நேரங்களில் காய்ச்சல் குறையும். தலைவலி உடல் வலி ஆகியவற்றிற்கும் குப்பைமேனி இலைகள் தீர்வு அளிக்கின்றனர் சிலர் குப்பைமேனி இலைகளை டீயில் போட்டு குடிப்பதுண்டு…
சுவாச கோளாறுக்கு குப்பைமேனி : காய்ச்சல் வந்தால் கூட மாத்திரை போட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடலாம் சளி பிடித்துக் கொண்டால் தும்மல் வரும் சாப்பிடுவதற்கு சிரமமாக இருக்கும் சாப்பிடும் உணவின் சுவை தெரியாது சளியை நீக்குவதற்கு குப்பைமேனி இலைகளை வெறும் வாயில் போட்டுக்கொண்டு நில்லுங்கள் ஆவி பிடிக்கும் போது குப்பைமேனி இலைகளை பயன்படுத்த சுவாச குழாயில் ஏற்பட்ட ஒரு விதமான நெரிசலில் இருந்து விடுபடலாம். ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்கு குப்பைமேனி இலைகள் உதவுகிறது..!!