
சென்னையில் இன்று ஜூலை 8 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் ராதா நகர், சாந்தி நகர், ஸ்டேசன் ரோடு, காமராஜ் தெரு, கட்டபொம்மன் தெரு, பாரதியார் தெரு, கலைமகள் தெரு, காந்தி நகர் முடிச்சூர் லட்சுமி நகர், பெரியார் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், ஏ.எல்.எஸ்.கார்டன், ராஜராஜேஸ்வரி நகர், துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோயில், ராஜு நகர், டி.வி.எச்.அப்பார்ட்மென்ட், வ.உ.சி.தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று மின்தடை என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 1, 2, 4 மற்றும் தண்டலம்துணை மின் நிலையத்தில் நடைபெற உள்ள மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல ஆத்துப்பாக்கம், , ரெட்டம்பேடு, ரெட்டம்பேடு சாலை, குருவாட்டுசேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆசிலாபுரம் ரெயில்வே மின் தொடர் மேம்பாட்டு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் ஆசிலாபுரம். முறம்பு. ஆவரந்தை பகுதி முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.