மூச்சுத் திணறல் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அறிகுறியாக குறட்டை அமைகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர் சமீப காலமாக முக்கோண தலையணைகள் பயன்படுத்துவது குறட்டைக்கு தீர்வளிக்கும் வகையில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்..
இடைவிடாத குறட்டை என்பது தொல்லை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் அவை உடல்நல பாதிப்புகளுக்கு அறிகுறியாக அமைகிறது எனவே குறட்டையை தடுப்பதற்கு என நெறிமுறைகளை வல்லுனர்கள் கூறுகின்றனர் குறிப்பாக முக்கோண வடிவிலான தலையணைகளை பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகின்றனர். மருத்துவர் ரீதியாக முக்கோண வடிவிலான தலையணைகளை பயன்படுத்துவது நன்மை அளிக்கும் என மருத்துவர் ஹரிச்சந்திரன் கூறுகிறார். தொண்டை தசைகள் தளர்தல் நாக்கின் நிலை அல்லது தூக்கத்தின் போது மூக்கடைப்பு போன்ற காரணங்களால் சுவாச பாதை பகுதி அளவு தடைபடும்போது அடிக்கடி குறட்டை ஏற்படுகிறது. முக்கோண தலையணைகளை பயன்படுத்துவதால் உங்கள் உடல் மேல்நோக்கி உயர்த்தப்படுகிறது இதனால் காற்றோட்டம் மேம்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்..
உடல் மற்றும் தலையை உயர்த்தி வைத்திருக்கும் விதமான முக்கோண தலையணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன இதை காற்று பாதையை மேம்படுத்துகிறது என்று மற்றொரு மருத்துவர் சமீர் கர்தே கூறுகிறார்..
முக்கோண தலையணைகளை பயன்படுத்துவது முற்றிலும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வாகாது என கூறியுள்ள மருத்துவர் ஹரிச்சந்திரன் இவை தற்காலிக தீர்வாக விளங்கலாம் என குறிப்பிடுகிறார். வாழ்க்கை முறை மாற்றங்களான உடல் எடை குறைப்பு தூங்குவதற்கு முன்பு மது அருந்துவதை தவிர்த்தல் சீரான உறக்கம் ஆகியவற்றை கடைபிடிக்கும் போது முக்கோண தலையணைகளை உபயோகிப்பது பலன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்..!!