
குறட்டை தொல்லையிலிருந்து விடுபட கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
குறட்டை என்பது குறட்டை விடுபவருக்கு ஒன்றும் தெரியாது. குறட்டை விடுபவரின் பக்கத்தில் படுபவர்களுக்குத்தான் அதன் வலி வேதனை தெரியும். படிப்பதற்கு சிரிப்பாக இருந்தாலும். இந்தக் குறட்டையினால் எத்தனை குடும்பங்கள் பிரிந்துள்ளது என படங்களிலே நாம் பார்க்கின்றோம். நிஜத்திலும் ஒரு சில வீடுகளில் இந்த பிரச்சனை உள்ளது. இந்நிலையில் குறட்டை விடுவோரின் பக்கத்தில் இருப்பவர்களுக்கே இவ்வளவு வலி என்றால் குறட்டை விடுபவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும். இந்நிலையில் குறட்டை தொல்லையில் இருந்து விடுபட இத மட்டும் குடித்தால் போதும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
200 மில்லி சூடான நீரில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து தினமும் இரவில் படுக்கும் முன் அருந்தி வந்தால் விரைவில் மாற்றம் தெரியும். குறட்டை விடுவதில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நல்ல மாற்றம் தெரியும். அதுமட்டுமின்றி உணவுக் குழாய் வறட்சி நீங்கும். நல்ல தூக்கம் வரும்.