இன்றைய காலங்களில் தூங்கும் போது பலரும் குறட்டை விடும் பழக்கம் உண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் குறட்டை விடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீமை என்று அமெரிக்க ஆய்வு மையம் கூறிகிறது.
American academy of sleep medicine நடத்திய ஆய்வில் குறட்டை விடும் பழக்கம் இன்றைய காலங்களில் மிகவும் அரிதாக உள்ளது, அப்படி இருக்கும் பட்சத்தில் குறட்டை விடுவதால் நமது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் இருக்கிறது என்று நாமே தெரிந்து கொள்ளலாம், மேலும் குறட்டை விடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் மற்றும் மன கவலைகள் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் இது உடலுக்கு ஆபத்தை தரக்கூடியது மேலும் குறட்டை வருவதற்கு உடல் எடையும் ஒரு காரணம்தான் முடிந்தவரை உடல் எடையை சராசரியாக வைத்திருக்கும் போது குறட்டை வருவது குறைவதாகவும் இரவில் தூங்கும் போது ஒரு பக்கம் உறங்குவதனால் குறட்டை விடுவதை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், குறட்டை விடுகிறீர்கள் என்றால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்..!!




