குறைகள் இது யாரிடம்தான் இல்லை எல்லோரிடமும் தானே இருக்கிறது ஏதேனும் ஒரு குறை இல்லாத மனிதன் நிச்சயமாக இருக்க முடியாது. ஆனால் அந்தக் குறையை நினைத்து என்றைக்கு நம் கவலைப்பட ஆரம்பிக்கிறோமோ அன்றைக்கு நாம் ஊக்கத்தை இழக்கிறோம்..
நம் குறை கூட ஒரு நாளில் நிறைவாகலாம் நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும் அதை நினைத்து வருத்தப்படுவது உண்டு வருத்தப்படுவதால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அந்தக் குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி அதை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம். குறைகள் நிறைகள் இரண்டுமே ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள் குறைகள் குடைகளா என்ற கேள்வி வரலாம். ஆமாம் குறைகளும் நமக்கு ஒரு வகையில் கொடைகள் தான் குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது ஆனால் நாம்தான் அதை கண்டு கொள்வதில்லை..
பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்ஸ் மாநில நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கைகளும் கால்களும் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த ஒரு தாய் தன் ஐந்து மாத குழந்தையை காப்பாற்ற முடியாது என்று அம்மாவின் அரசு தீர்மானம் செய்தது. தன்னால் முடியும் என்று நிரூபிக்க அந்த தாய் நீதிமன்றத்தை நாடினார் வழக்கு ஆரம்பமானதும் அந்த தாய் நீதிமன்றத்தில் செய்தது அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கைகளும் கால்களும் இல்லாத அந்த தாய் தன் உதடுகள் நாவு இவற்றின் உதவியுடன் அவருக்கு முன் படுத்திருந்த குழந்தையின் துணிகளை கழற்றி மீண்டும் புது துணியை மாட்டி விட்டார் குழந்தைக்கு தேவையான உணவை ஊட்டி விட்டார் இதை கண்ட நீதிபதி தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று அந்த தாயை வணங்கினார் பின்னர் அவர் திறமைகளை உடலழகி பெற்றிருப்பது உண்மையின் ஒரு பகுதி தான் உள்ளத்தில் பெற்றிருக்கும் உறுதியே உண்மையான திறமை என்பதை எங்கள் அனைவருக்கும் உணர்த்திய உங்களுக்கு நன்றி என்று கூறினார். குறைகளும் நிறைகளும் அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது நமது குறைகளை பெரிது படுத்தினால் அவையே அதிகமாக நம் மனதில் தங்குகின்றன எனவே நமது குறைகளை பொருட்படுத்தாமல் அதை எண்ணி கவலைப்படாமல் துணிந்து செயல்படுவோம்..!!